IT Chapter Two Movie in Tamil Review

It 2017 Movie in Tamil : Download



IT Chapter Two Movie 2019
Director : Andrés Muschietti
Distributed : Warner Bros. Pictures 

இன்று ( 06.09.2019 ) It படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையே திரையரங்குகளில் அலறவைத்துள்ளது இந்த IT படத்தின் இரண்டாம் பாகம். மேலும் இந்த படத்தை குழந்தைகள் பார்க்காமலிருப்பதே நல்லது. IT படத்தின் முதல் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன் எதிரொலியாக 3.5 கோடி அமெரிக்க டாலர்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட இப்படம் 70 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான வசூலை செய்தது.
இந்த படத்தின் கதை 27 வருடங்களுக்கு ஒருமுறை வந்து சின்ன குழந்தைகளை தனக்கு இரையாக்கிக்கொள்ளும் பெண்ணிவைஸ் என்ற கோமாளி வேடமணிந்த ஒருவகையான சாத்தனிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதுதான் இந்த படத்தின் முழு கதை. பெண்ணிவைஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஒவ்வொரு நாளும் நடித்துமுடித்த பிறகு தூங்கும்போது அந்த பெண்ணிவைஸ் கனவில் வந்து பயமுறுத்துவதாக அவரே ஒரு பெட்டியில் கூறியுள்ளார். அந்த அளவிற்கு இந்த பெண்ணிவைஸ் கதாபாத்திரம் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஒன்றாம் பாகத்தைவிட அதிகமான பயத்தையும், நல்ல கருத்துக்களையும் மக்களிடையே பெற்றுள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் பல கோடி டாலர்களை வசூலாக பெறப்போகிறது என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் நம்மை மரண பயத்தின் வாசலுக்கே கொண்டுசெல்கிறது. அதனால்தான் இப்படத்தின் தமிழ், தெலுங்கு , ஹிந்தி போன்ற இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.
IT Chapter Two Movie in Tamil Review IT Chapter Two Movie in Tamil Review Reviewed by Hollywood Tamizhan on September 06, 2019 Rating: 5
Powered by Blogger.