Basic Instinct

Basic Instinct 1992 Movie in Tamil Dubbed

      Click Here : Download


2020 ஆம் ஆண்டு வெளியாகப்போகும் Hollywood திரைப்படங்கள்

1. Godzilla vs Kong  
    Kong: Skull Island திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இது மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான King Kong திரைப்படம் என்பதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படம் வெளியாகிய அந்த சமயத்தில் 56.67 கோடி அமெரிக்க டாலர்களை வசூலாக பெற்றது. இதனை தொடர்ந்து இந்த வருடம் (2019) வெளியான Godzilla: King of the Monsters திரைப்படமும் 38.59 கோடி அமெரிக்க டாலர்களை வசூலாக பெற்றது. மேலும்  ஏற்கனவே 1962 ஆம் ஆண்டு Godzilla vs King Kong என்ற திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டு Godzilla vs Kong என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் வெற்றி பெறுமா? அல்லது தோல்வியை தொடுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

2. A Quiet Place: Part - 2 
   
   கடந்த 2018 ஆம் ஆண்டு A Quiet Place என்ற படம்  இதுவரை மக்கள் பார்க்காத horror திரைப்படமாக வெளியானது. இந்த படத்தில் உள்ள 80% காட்சிகளில் ஒரு வசனம் கூட இல்லாமல்தான் இருக்கும். இதன் கதை என்னவென்றால், ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் தங்களின் வாயை திறந்து பேசவே கூடாது. அப்படி பேசினால் ஒருவகையான வேற்றுகிரக உயிரினம் அவர்களை கொன்றுவிடும். இப்படி இருக்கும் பட்சத்தில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு குடும்பம் அந்த வேற்றுகிரக உயிரினத்திடமிருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் கதை. இதனை தொடர்ந்து A Quiet Place படத்தின் இரண்டாவது பாகம் வருகிற 2020 ஆம் ஆண்டு வெளியாகப்போகிறது என்ற அறிவிப்பை தொடர்ந்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

3. The Eternals 

   Marvel திரைப்படங்கள் என்றாலே மக்களிடையே பெற்றுவிடும். கடந்த 10 ஆண்டுகளில் Marvel Studios மூலம் வெளியான 80% படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதுவும் இந்த ஆண்டு (2019) வெளியான Avengers End Game திரைப்படம், இதுவரை வெளியான Hollywood படங்களிலேயே Avatar படம்தான் அதிக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆனால் அந்த Avatar படத்தின் வசூலையே இந்த Avengers End Game திரைப்படம் முறியடித்துள்ளது. மேலும் Avengers படம் நிறைவடைந்த நிலையில் Marvel-ல் அடுத்து அதிகப்படியான மக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் படம்தான் The Eternals. இந்த படம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகப்போவதாக Marvel Studios சார்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எது எப்படி இருந்தால் நமது Tony Stark மீண்டும் வருவாரா? என்பதே இரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Basic Instinct Basic Instinct Reviewed by Hollywood Tamizhan on September 06, 2019 Rating: 5
Powered by Blogger.